அம்பாறைப் பாண்டிருப்பு பகுதியில் வறுமையின் கீழ் வாழும் குழந்தைகளுக்கு எமது டான் தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் பால் மா வழங்கி வைக்கப்பட்டது.
டான் தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் நேஷன் லீடர்ஸ் பவுண்டேன் நிதி அனுசரணையில் வறுமைக்குட்பட்ட குழந்தைகளுக்கான பால் மா வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வருமானம் குறைந்த ஒரு வயது தொடக்கம் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உள்ள தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு இந்த பால் மா பெட்டிகளும், உலர் உணவுப்பொதிகளும் வழங்கப்பட்டன.
நேஷன் லீடர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெகநாதன் கிசான்,எமது டான் பிராந்திய செய்தியாளர் அகரம் செ.துஜியந்தன் ஆகியோர் வழங்கவைத்தனர்.
இக்கட்டான இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கானபால் மாவகைகளைவழங்குவதற்குமுன்வந்தடான் தொலைக்காட்சிமற்றும் நேஷன் லீடர் பவுண்டேன் ஆகியவற்றுக்குமக்கள் நன்றி தெரிவித்தனர்.