ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, உள்ளுராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் ஆராய்ந்துள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மாவட்டக் கிளை மறுசீரமைப்பது தொடர்பிலும், உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில், இன்று ஆராய்ந்துள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, குருசுவாமி சுரேந்திரன், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.