உள்ளூராட்சி மன்றங்களில் வரவு
செலவுத்திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி

0
201

உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பங்கேற்புடனான பாதீடு வரவு செலவுத் திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி மூதூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றங்களுக்குள்ள பௌதீக, மனித வளங்களை வினைத்திறனாகவும் செயற்திறனாகவும் பயன்படுத்தி பிரதேச மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு
அமைந்ததாக பயிற்சி செயலமர்வு நடைபெற்றது.

பிரதேச மக்களின் சமூக பொருளாதார சுகாதார பொது வசதிகள் காணி கட்டடங்கள் பொதுப்பயன்பாட்டு நலன்புரி சேவைகள் என்பனற்றை வழங்குவதோடு அவற்றை கண்காணிப்பதனூடாக நிலையான அபிவிருத்தி இலக்கை அடைவதே நோக்கம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

பயிற்சி செயலமர்வின் இறுதியில் மக்கள் பங்கேற்புடனான பாதீடு வரவு செலவுத் திட்டம் முன்னுரிமையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு அது மூதூர் பிரதேச சபை நிருவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

ஆசியா பௌண்டேஷனின் நிதி அனுசரணையில் செயலமர்வு நடைபெற்றது.

மக்களுடைய, அதிகாரிகளுடைய,அரசியல் பிரதிநிதிகளுடைய முழுமையான பங்களிப்புக் கிடைப்பதை உறுதி செய்து நிலையான அபிவிருத்தி இலக்கை அடைந்து கொள்ளும் நோக்கோடு உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் பங்கேற்புடனான பாதீடு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் பயிற்சி நெறிகள் இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் பொன். சற்சிவானந்தம் தெரிவித்தார்.

நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ. அறூஸ்,உப தவிசாளர் எஸ்.துரைநாயகம்,சபையின் செயலாளர் வி.சத்தியசோதி, பிரதேச சபை முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், அதிகாரிகள் பொதுமக்கள், வரியிறுப்பாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.