தொழிலதிபர் திலித் ஜயவீர அவர்களின் பொருளாதார அபிவிருத்தி கருத்தரங்கில் கூட்டமைப்பு உறுப்பினர்களும் பங்கேற்பு!
இனி ஒரு விதி செய்வோம் எனும் தொனிப்பொருளில் அதிகரித்துவரும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் வணிகங்களை முன்னெடுத்துச் செல்லும் பாரிய சவாலினைஎவ்வாறுவெற்றி கொள்வதென்பது தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் செயலமர்வின் ஓர் அங்கமாக இன்றைய தினம் யாழில் உள்ளதனியார் விடுதியில் செயலமர்வு இடம்பெற்றது
தொழிலதிபர் திலித் ஜயவீர அவர்களின் பங்கு பற்றுதலில் இடம்பெற்ற செயலமர்வில்
வங்கி உத்தியோகத்தர்கள், வியாபார நிறுவனங்களின் பிரதிநிதிகள்,வர்த்தகர்கள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,சட்டத்தரணிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்,