எரிபொருள் விலையில் திருத்தம்!

0
109

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 346 ரூபாயாகவும், ஓட்டோ டீசல் 27 ரூபாய் குறைக்கப்பட்டு 329 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் 2 ரூபாய் குறைக்கப்பட்டு 247 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 பெட்ரோல் 3 ரூபாய் அதிகரித்து 426 ரூபாயாகவும், சூப்பர் டீசல் 3 ரூபாய் அதிகரித்து 434 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சினோபெக் மற்றும் ஐ.ஓ.சி. நிறுவனங்களும் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளன.