எழுத்தாளர் சிவ.தணிகாசலம் எழுதிய ‘செவாலியார் இளவாலை அமுது’ நூல் வெளியீடு

0
169

பிரித்தானியாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சிவ.தணிகாசலம் எழுதிய ‘செவாலியார் இளவாலை அமுது’ நூல் வெளியீட்டு விழா நேற்று இணுவில் பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி தேவராஜா தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் ஆசி உரையை சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் நிகழ்த்தினார்.

வாழ்த்துரையை ஏசிரி கல்வி நிலைய அதிபர் இரா அருட்செல்வம் நிகழ்தியதுடன், இராமலிங்கம் மகாராஜா முதற்பிரதியை பெற்றுக்கொண்டார்.