ஐ.தே.கட்சியில் இருந்து 1137 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானம்

0
167

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கின்றமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.