ஐ.நாவில் ஜனாதிபதி இன்று உரை!

0
137

நியுயோர்க்கில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78 வது கூட்டத் தொடரில் இலங்கை நேரப்படி இன்றிரவுஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று உரை நிகழ்த்தவுள்ளார்.
இதேவேளை, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான உலகலாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
12 சதவீத முன்னேற்றத்தை மாத்திரமே தற்போது காண முடிவதாகவும் ஏனைய முக்கியமான இலக்குகளில் 30 சதவீதத்தை இன்னும் அடைந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளால் 2015ல் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலின் பின்புலம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
அதே ஆண்டில், COP -21 அமைப்பின் 196 நாடுகளால் நிறைவேற்றப்பட்ட பெரிஸ் ஒப்பந்தம், முற்போக்கான உலகளாவிய முயற்சியாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை,ஐக்கிய நாடுகளின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதியுடன் சென்றுள்ள தாம் அங்கு பல தரப்பினரை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.