ஐ.நா சபையின் கடல் சட்டத்தின் கீழ் இலங்கை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து!

0
12

கடந்த வாரம் நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்,தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்தின் கீழ் இலங்கையும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி சர்வதேச அரசாங்கங்களுக்கு இடையே நடைபெற்ற கடல் பல்லுயிர் பெருக்கம் குறித்த விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த சட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இலங்கை 109வது நாடாக தற்சமயம் ஒப்பமிட்டுள்ளது.

ஒப்பந்தம் கைச்சாத்தானதை அடுத்து, ஒப்பந்தத்தின் விதிமுறைகள் உரிய முறையில் செயல்படுவதை மேற்பார்வையிடுவதற்காக இலங்கை அரசாங்கம் விசேட குழுவொன்றை நிறுவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுச் சட்ட கட்டமைப்பை உருவாக்க, சர்வதேச ஒத்துழைப்புடன் சட்ட வரைவினை இந்த குழு ஒன்றிணைந்து செயற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் இணைவதன் மூலம் கடல்சார் பாதுகாப்பின், மேம்பாட்டுத் திட்டங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சர்வதேச நாடுகளின் விசேட அறிவினை பெற முடியும். இது தவிர நாட்டின் கடல் சார்ந்த நிர்வாகத்தை உறுதி செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள