ஓட்டப்பந்தயத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!!

0
61

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொகஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

இதில் 08 வயது சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அத்துடன், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீதமுள்ள ஓட்டப் பந்தயங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஃபொகஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயம் 05 வருடங்களின் பின்னர் இந்த வருடம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த போட்டி பாதுகாப்பான முறையில் நடத்தப்படவில்லை என சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் செய்தியொன்று மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.