ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இராணுவத்தினர் உதவி

0
358

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓய்வூதியம் பெறும் நபர்கள் வங்கிகளுக்கு சென்று தமது
ஓய்வூதிய கொடுப்பனவுகளை வங்கிகளில் பெற்றுக் கொள்வதற்கு இராணுவத்தினர் அழைத்து செல்லும் நடவடிக்கை இன்று திருக்கோவிலில் இடம்பெற்று இருந்தன.

இவ் நடவடிக்கையானது திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் திருக்கோவில் காஞ்சிரம்குடா 242வது இராணுவ முகாம் படையணியின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதர்களினால் பேரூந்து தொற்று நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஓய்வூதியகார்களுக்கு முககவசம் மற்றும் தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டு சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வங்கிகளுக்கு அழைந்துச் சென்று ஓய்வுதியம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.