கச்சத்தீவினை அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்: அன்னலிங்கம் அன்னராசா

0
108

கச்சதீவு எங்களுடையது அதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண  இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  இதனை தெரிவித்தார்.    

வடக்கு கடல் தொழிலாளர்களாகிய எங்களை பொறுத்த அளவிலே கச்சத்தீவு என்பது இலங்கை ஆளுகைக்கு உட்பட்டது. எங்களுக்கு சொந்தமானது.

இந்தியாவிலே அல்லது தமிழ் நாட்டில் அந்த மீனவ சமுதாயத்தை தவறான வளிநடத்தலுக்காக கச்சத்தீவுதான் பிரச்சினை என்ற தோற்றப்பாட்டை அரசியல் கட்சிகள் முன்கொண்டு போவது எங்களுக்கு கவலை அளிக்கிறது என தெரிவித்தார்.