27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கடற்றொழில் – நீர் வேளாண்மை விருத்திக்கு இருதரப்பு ஒப்பந்தம்

இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மையை விருத்தி செய்வது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை இலங்கை – வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் பாம் தி பிஜ் நொகெக் (Pham Thi Bich Ngoc) ஆகியோருக்கிடையில் இன்று (17) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

2021 – 2025 ஆம் ஆண்டு வரையான வேலைத் திட்டங்களை உள்ளடக்கிய இருதரப்பு ஒப்பந்தத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பான தொழில் நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு உட்பட நீர் வேளாண்மை தொடர்பான நவீன முறைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது போன்ற விடயங்களை உள்ளடக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், வியட்நாமில் இருந்து துறைசார் நிபுணர்களை வரவழைத்து இறால் வளர்ப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறைகளையும் நீர்வேளாண்மை விருத்தி தொடர்பான விஞ்ஞான ஆய்வுப் பட்டறைகளை நடத்துவது தொடர்பான விடயங்களையும் குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தில் உள்ளடக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வேலைத் திட்டம் 2010 – 2013 ஆண்டு காலப் பகுதியில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமையை அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், கடந்த கால அனுபவங்களை கருத்தில் எடுத்து புதிய இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் கையளிப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் இன்று கையளிக்கப்பட்டது.150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்...