கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

0
6

தற்போதைய நாட்களில் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, மின்னல் ஏற்படும் போது மக்கள் சமவெளிப் பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்குமாறு அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கோரியுள்ளார்.

தற்போது,மின்னல்களைத் தோற்றுவிக்கக்கூடிய மேகங்களின் உருவாக்கம் அதிகமாக உள்ளது.
காலை வேளைகளில் அதிக வெப்பம் நிலவுவதால் அதிகளவில் நீர் ஆவியாகி, இத்தகைய மேகங்கள் உருவாகின்றன. இதன்காரணமாக, பிற்பகல் வேளைகளிலேயே அதிகளவில் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

மின்னல் ஏற்படும் வேளையில் மின்சாதனங்களை செருகியிலிருந்து நீக்குவதன் மூலம் வீட்டுக்குள் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும். அதேநேரம், மின்னலின் போது, சமவெளிப் பகுதிகளில் இருப்பதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சமவெளிகளில் இருப்பவர்கள் அதிகளவில் மின்னல் தாக்கங்களுக்கு உள்ளாகக்கூடிய சாத்தியம் இருப்பதால், குறித்த சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான இடங்களை நாடுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கோரியுள்ளார்.