கம்பஹாவில் 39 தொழிற்சாலைகளை சேர்ந்த 462 தொழிலாளர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
இலங்கை முதலீட்டு சபையின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த 414 தொழிலாளர்களும் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த 12 தொழிலாளர்களும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கம்பஹாவின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தவிர மேலும் பத்து தொழிற்சாலைகளை சேர்ந்த 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பில் மீன்பிடித்தொழிலுடன் தொடர்புபட்டுள்ள சமூகத்தினர் மத்தியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.