தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இன்று (29) காலை 8 மணி முதல் 10 மணி வரையில் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 21 பொலிஸ் பிரிவுகளுக்கும் களுத்துறை மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளுக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
14 மணித்தியாலங்கள் இவ்வாறு விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசங்களை அணிந்து செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.