கண்ணகி அம்மன் ஆலய திருவிழாவிற்கு பத்து நபர்கள் அனுமதி

0
447

கல்முனை பிரதேசத்தில் இரண்டு கண்ணகி அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளதுடன் இன்று கல்முனை மூன்றாம் பிரிவில் அமைந்துள்ள கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய சடங்குகள் ஆரம்பமாகியுள்ளதுடன் நாளை கல்முனை இரண்டாம் பிரிவில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலய சடங்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அம்மனின் பூசை வழிபாடுகளை பிரதம பூசாரி உட்பட பத்து அடியார்களின் பங்குபற்றுதலோடு செய்து முடிப்பதற்கான அனுமதி சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு சுகாதாரப் பிரிவினரால் கடுமையான சுகாதாரவிதிமுறை விதிக்கப்பட்டுள்ளதோடு ஆலயதிருவிழாவில் ஊர்வலங்கள்,பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது,பிரசாதம் வழங்குதல், கூட்டமாக கூடிநிற்பது, ஆலயவளாகங்களில் கடைகள் வைப்பது என சகலவிதமான செயற்பாடுகளுக்கும் முற்றமுழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் பூசைக்கென தங்கி நிற்பவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் சென்றுவர அனுமதியளிக்கப்படமாட்டார்கள் என்பதுடன் பத்து நாட்களும் ஆலயத்திலே தங்கி நிற்கவேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளனர்.