32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்லாறு மத்திய விளையாட்டு
கழகத்தின் 15வது ஆண்டு நிறைவு

போதைப்பொருளை எமது வடக்கு – கிழக்கு மாகாணத்துக்குக் கொண்டு வருவது இராணுவமாகவோ, புலனாய்வு துறையாகவோ, அரசாங்கத்துக்கு நெருக்கமானவர்களோ இருக்கலாம் என்ற சந்தேகத்தினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 15வது ஆண்டு நிறைவினை கொண்டாடும் முகமாக நேற்று மாலை பெரியகல்லாறு கலாச்சார மண்டபத்தில் ஆண்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கழக கொடியினை ஏந்தியவாறு அதிதிகளை வரவேற்று நடைபவனியாக மண்டபம் வரை வருகைதந்து தேசிய கொடி மற்றும் கழக கொடி என்பன ஏற்றப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இதன்போது அலங்கரிக்கப்பட்ட மேடை திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து இறைவணக்கம் மற்றும் வரவேற்பு நடனம் மற்றும் கழக உறுதிமொழி சத்யப்பிரமானம இடம்பெற்றதுடன் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் நடைபெற்றது அத்தோடு பங்குபற்றிய கலைஞர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள புலமைப் பரிசில் சித்திபெற்ற மாணவர்கள், க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் க.பொ.த.உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மற்றும் பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறுகிறதுடன் அதிதிகளும்
கௌரவிக்கப்பட்டனர்.

கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் தலைவர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், மதகுருமார்கள், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், துறைசார் வல்லுனர்கள், கழக உறுப்பினர்கள், ஏனைய விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles