கள்ள மாடு வெட்டியவர்கள் ஒருவருடத்திற்கு பின் ஊர்காவற்துறை பொலிசாரால் கைது!

0
138

கள்ளமாடு வெட்டிய மூவர் ஒருவருடத்திற்கு பின் ஊர்காவற்துறை பொலிசாரால் கைது

2020.12.12 அன்று 48 ஆயிரம் ரூபா பெறுமதியான மாட்டினை களவாடி வெட்டியமை தொடர்பான வழக்கு, கடந்த ஒருவருட காலமாக ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் ஊர்காவற்துறை – அனலைதீவு 3ம் வட்டாரத்தில் வசிக்கும் சந்தேகநபர்களான 3 நண்பர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.