காசாவின் வடக்கு பகுதியிலும் தெற்கு பகுதியிலும் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 19 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை காசாவில் இதுவரை 560,000 சிறுவர்கள் போலியோ தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.