காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்க அலுவலகம் முன்பாக போராட்டம் இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களையும், பதாகைகளையும் ஏந்தியவாறு, காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச மட்டத்திலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தங்களுக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.