காத்தான்குடியிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களையும் மூட தீர்மானம்!

0
258

மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களையும் இன்று(28.10.2020) புதன்கிழமை தொடக்கம் மூடுவதென காத்தான்குடி பிரதேச கொவிட் 19 தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.
காத்தான்குடி பிரதேச கொவிட் 19 கொரோனா தடுப்பு செயலணியின் அவசரக் கூட்டம் இன்று புதன்கிழமை காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அஸ்மி ஹசன், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, குருக்கள் மடம் இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் எகெலப் பொல, மேற்பார்வை பொதுச் சுகாதர பரிசோதகர் எம்.பசீர், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எஸ்.எம்.ஹாறூன், காத்தான்குடி பள்;ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கே.எல்;.பரீட் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தறிபோதைய சூழ் நிலையை கருத்திற் கொண்டு காத்தான்குடியிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதென தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு காத்தான்குடியிலுள்ள சிகை அலங்கார நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதெனவும் ஹோட்டல்கள் சிற்றுண்டிச் சாலைகளில் அமர்ந்திருந்து உணவருந்துவதை நிறுத்துவதுடன் பார்சல் செய்து கொடுக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் இதன் போது தீர்மாணிக்கப்பட்டது.
அத்துடன் டெங்கு பரவும் அபாயமும் உள்ளதால் அது தொடர்பாகவும் மக்களை விழிப்பூட்டவதுடன் வீடுகள் மற்றும் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க விழப்பூட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.