29.9 C
Colombo
Friday, April 26, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காத்தான்குடியில் காழி நீதிமன்ற கடமைகள்,அதிகாரம்
பற்றிய செயலமர்வு

இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் நடைமுறைப் பிரயோகம் மற்றும் காழி நீதிமன்ற கடமைகளும் அதிகாரமும் பற்றிய செயலமர்வொன்று இன்று நடைபெற்றது

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை ஏற்பாட்டில் அதன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

நாவலப்பிட்டி. ஹாஷிமிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் கம்பளை முன்னாள் காழி நீதிபதியுமான அஷ்ஷெய்க் எம்.கலீலுர் ரஹீம் இதன் போது உரையாற்றினார்.

காழி நீதிமன்றம் மற்றும் திருமணப் பிரச்சினைகள் விவாகம், விவாகரத்து. பிள்ளைச் செலவு. தாபரிப்பு. போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இவர் உரையாற்றினார்.

இதன் போது இது தொடர்பான கேள்விகள் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.

இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட ஏற்பாடு இது சட்டமாக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரச்சாரக் குழு தலைவரும் காத்தான்குடி சித்தீக்கீயா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துர் கபூர் மதனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் டி.எம்.அன்சார் நழீமி, உட்பட உலமாக்கள், பள்ளி வாயல் நிருவாகிகள் என பலயரும் கலந்து கொண்டனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles