காத்தான்குடியில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டது

0
430

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு இன்று மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறீதர் இக் கொடுப்பனவை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி. பத்மா ஜெயராஜா வங்கி முகாமையாளர்களான ஏ.எல்.ஸெட்.பஹ்மி எஸ்.எச்.எம். முஸம்மில் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இக்கொடுப்பனவானது சமுர்த்தி பெறுவோர், சமுர்த்தி பெற தகுதியானோர், விஷேட தேவையுடையோர், முதியோர் கொடுப்பனவை பெறுவோர் மற்றும் தொழில் இழந்தோருக்காக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.