மட்டக்களப்பு காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் நடாத்தி வரும் அல் குர்ஆன் மனனப் பாடசாலை மாணவ மாணவிகளுக்கான கௌரவிப்பு விழா
இன்று காத்தன்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய பள்ளி வாயல் மண்டபத்தில்
இடம்பெற்றது.
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும் தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.பி.எம்.அலியார் ரியாதி தலைமையில் நடைபெற்ற விழாவில் காத்தான்குடி ஜம் இய்யத்துல உமா சபையின் தலைவர் மௌலவி ஏ .எம் .ஹாரூன் றஸாதி, இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை அதிபர் ஏ.எல்.எம.ஹசன் அலி நழீமி, பெண்கள் பிரிவு தலைவர் எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயில் உட்பட அதன் விரிவுரையாளர்கள், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் நிர்வாகிகள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த புனித ரமழான் மாதத்தில் புனித அல்குர்ஆனை மூன்று தடவைகள் முழுவதுமாக ஓதிய மாணவர்கள் மற்றும் அல்குர்ஆன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவ மாணவிகள் சான்றிதழ்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு, விரிவுரையாளர்களும் நினைவுச் சின்னம் வழங்கி
கௌரவிக்கப்பட்டனர்