காரை நகர் ஈழத்து சிதம்பர வருடாந்த உற்சவம் நடக்காதிருக்கும் வகையில் ஆலயத்தினை பாலஸ்தாபனம் செய்ய சிலர் முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.
ஈழத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகிய ஈழத்து சிதம்பரம் சிவனாலயத்தில் மார்கழி மாதம் நடைபெற இருக்கின்ற திருவெம்பாவை உற்சவத்திற்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில்,
மாணிக்கவாசகர் மடாலாயத்தினருக்கும் ஈழத்து சிதம்பர ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில் இடம் பெற்ற நீதிமன்ற வழக்கின் போது ஏற்கனவே மணிவாசகர் மடாலயத்தினை நடத்தியவர்களே மீளவும் அதனை நடாத்த முடியும் என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டதன் காரணமாக இம்முறை திருவெம்பாவை உற்சவம் நடக்காதிருக்கும் வகையில் ஆலயத்தினை பாலஸ்தாபனம் செய்ய சிலர் முயற்சியினை மேற்கொண்டுள்ளதோடு,
காரைநகரில் ஈழத்து சிதம்பரம் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்படவுள்ளதான துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதனைக் கேள்வியுற்ற காரைநகர் பகுதி மக்கள் பெருந்திரளாக ஒன்று சேர்ந்து நேற்றைய தினம் காரைநகர் பிரதேசசபை தவிசாளரிடம் குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறும் திருவெம்பாவை உற்சவத்தின் பின்னர் ஆலயத்தினை பாலஸ்தாபனம் செய்யலாம் என கோரி 300-க்கும் மேற்பட்ட காரைநகர் வாழ் மக்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு மகஐர் ஒன்றினை கையளித்திருந்தனர்
இது தொடர்பில் நேற்று காரைநகர் பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வின் போது விவாதிக்கப்பட்டு காரை நகர் பிரதேச செயலரிடம் குறித்த மகஜரினை கையளித்து குறித்த விடயத்தினை பிரதேச செயலரே கையில் எடுக்குமாறு கோருவதாக நேற்றைய அமர்வின் போது தீர்மானிக்கப்பட்டதற்கமைய
நேற்றைய தினம் பிரதேச செயலரிடம் குறித்த மகஜர் காரைநகர் பிரதேச சபை தவிசாளரால் கையளிக்கப்பட்டது
இன்றைய தினம் ஆலய திருவெம்பாவை உற்சவ உபயகாரர்கள் ஒன்றிணைந்து பிரதேச செயலரிடம் மேற்குறித்த விடயத்தினை தடுத்து நிறுத்துமாறு கோரியிருந்தனர்
அதே போல் ஈழத்து சிதம்பர ஆலயத்தின் ஆதின கர்த்தாக்களில் ஒருவராகிய
ஆண்டியையா அம்பலவிமுருகனும் காரை நகர் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறும்
திருவம்பாவை உற்சவத்தினை நடாத்திய பின் பாலஸ்தாபனம் செய்யலாம் எனவும் பிரதேச செயலரிடம் கோரி இருந்தார்
பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமையவும், ஆலய ஆதீன கர்த்தாக்களில் ஒருவராகிய அம்பலவிமுருகன் அவர்களின் கோரிக்கைக்கு இணைவாகவும் உடனடியாக பிரதேச செயலர் ஈழத்து சிதம்பர ஆலயத்திற்கு சென்று ஆதினகத்தாக்களில் இன்னொருவராகிய சுந்தரலிங்கம் குகனேஸ்வரிடனம் வாக்குமூலம் ஒன்றினை பெற முயன்றபோது குகனேஸ்வரன் வாக்குமூலம் வழங்க மறுப்பு தெரிவித்ததோடு நாளைய தினம்
சட்டத்தரணி ஒருவரின் மூலம் வாக்குமூலமளிப்பதாக தெரிவித்திருந்தார்
அத்தோடு ஆலயத்தின் பூசகரிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட போது பாலஸ்தாபனம் செய்வதற்கான துண்டு பிரசுரமும் பிரதேச செயலருக்கு கையளிக்கப்பட்டது
இதனை ஆராய்ந்த பிரதேச செயலர் நாளைய தினம் மற்றைய ஆதீனகத்தாவின் வாக்குமூலம் பெற்ற பின் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார்