


கசூரினா பீச் பிரதேசத்தின் எல்லைப்படுத்தல், அபிவிருத்தி ஒதுக்கத்திலிருந்து சபையின் 4.2 மில்லியன் ரூபா செலவில் 1410 அடி நீளமான நிரந்தர முட்கம்பி வேலி அமைத்து முடிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஈழத்து சிதம்பரத்தின் தீர்த்தக்கரையின் மூலம் கசூரினா பீச் பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதும், இராணுவமுகாம் பிரதேசத்திலிருந்து பீச் பகுதிக்கு பிரவேசிப்பதும் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.
கசூரினா பீச் பிரதேசம் முழுவதும் 8 ஏக்கர் விஸ்தீரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல அபிவிருத்திகளுக்கும் சபைநிதி ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் அவர்களது நெறிப்படுத்தலின் கீழ் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.