காவல்துறை திணைக்களத்திற்கென தனியான வேதன கட்டமைப்பை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் நாடாளுமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், காவல்துறை உத்தியோகத்தர் அல்லது அரச உத்தியோகத்தர் எவருக்கும் வேதனம் குறைக்கப்படவில்லை எனவும், முதன்முறையாக அடிப்படை வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
“தற்போது, ஒரு காவல்துறை கான்ஸ்டபிளின் அடிப்படை வேதனம் 29,540 ரூபாய் ஆகும். இது இந்த ஆண்டு 44,293 ஆக அதிகரிக்கும். இந்த ஆண்டு, ஒரு காவல்துறை கான்ஸ்டபிளுக்கு 6,182 ரூபாய் உயர்வு கிடைக்கும். ஒரு காவல்துறை சார்ஜென்ட்டுக்கு 6,441.54 ரூபாய் , ஒரு எஸ்.ஐ க்கு 6,551.72 ரூபாய் , ஒரு ஐ.பி.க்கு 7,040.24 ரூபாய் , ஒரு சி.ஐ.க்கு 7,655.75 ரூபாய் , ஒரு ஏ.எஸ்.பிக்கு 8,244.11 ரூபாய் , ஒரு எஸ்.பி/எஸ்.எஸ்.பிக்கு 9,925 ரூபாய், ஒரு டி.ஐ.ஜி/சீனியர் டி.ஐ.ஜிக்கு 11,118 ரூபாய், ஒரு ஐ.ஜி.பிக்கு இந்த ஆண்டு 13,223 ரூபாய் என உயர்வு கிடைக்கும்.
” 29,540 ஆக இருக்கும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிளின் தற்போதைய அடிப்படை வேதனம் இந்த ஆண்டு 44,293 ஆகவும், 2026 இல் 46,921 ஆகவும், 2027 இல் 49,550 ஆகவும் அதிகரிக்கும்.
பின்னர், தற்போது அடிப்படை வேதனம் 29,540 ரூபாயாக இருப்பவர் 2027 ஆம் ஆண்டுக்குள் 49,550 ஆக உயரும் . மேலும், இது தொடர்பாகப் பிற கொடுப்பனவுகளும் அதிகரிக்கும்.”