கலேவல, ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் வயலுக்கு நீர் இறைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த மூன்று சிறுவர்களும் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
12 மற்றும் 15 வயதுடைய சிறுமிகள் இருவரும் 7 வயதுடைய சிறுவன் ஒருவனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கலேவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.