24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கியூபாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு- மக்கள் வீதிகளில் தஞ்சம்

கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிக்;டர் அளவில் கடுமையான நிலஅதிர்வு ஏற்;பட்டுள்ளது.

நிலஅதிர்வை அடுத்து அச்சமடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

எனினும் நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பார்ட்டோலோம் மாசாவின் கடற்கரை பகுதியில் தெற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் இந்நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த அதிர்வு கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபாவிலும் உணரப்பட்டுள்ளதுடன் ஹோல்யின், குவான்ட்னாமோ போன்ற நகரிங்களிலும் உணரப்பட்டுள்ளது.

அருகில் உள்ள ஜமைக்கா தீவிலும் நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து சிலமணி நேரத்தில் மீண்டும் பார்ட்டோலோம் மாசா கடலுக்கு அடியில் 22 மைல் ஆழத்தில் மையம் கொண்டு 5.9 ரிக்;டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles