கிளிநொச்சி நகரத்தில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் பாரிய வேப்பமரம் ஒன்று முறிந்து விழுந்ததில், 3 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன.
ஒரு வர்த்தக நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர் சிறு காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏ-09 வீதியின் புனித திரேசம்மாள் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையத்துக்கு அருகில் நின்ற பாரிய வேப்பமரம் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் முறிந்து விழுந்ததில், வர்த்த நிலையங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன.