24 C
Colombo
Friday, November 15, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிளிநொச்சியில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி!

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி இன்று நடைபெற்றது. தருமபுர வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி கண்டாவளைப் பிரதேச செயலகம் வரை நடைபெற்றதுடன் பிரதேச செயலகத்தில் மார்பகப் புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வு உரைகள் நிகழ்த்தப்பட்டன.

நிகழ்வில் பிராந்திய தொற்றுநோய் வைத்தியர் க.றஞ்சன், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்கள் இராணுவத்தினர் பொலிசார் , தாதியர்கள், கண்டாவளை பிரதே செயலக உத்தியோகத்தர்கள், வலய கல்வி பணிப்பாளர், கண்டாவளை பாடசாலை மாணவர்கள், கிராம சேவையாளர்கள் மற்றும் பொது அமைப்புகள் பிரதிநிதிகள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles