கிளிநொச்சி – முகமாலை பகுதியில் 29 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

0
124

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் வைத்து 29 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில் கஞ்சா ஏற்றி வருவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முகமாலை பகுதியில் வைத்து 29 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூட்சமமான முறையில் கப் ரக வாகனத்தில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின் பின் கஞ்சாவை மீட்ட பொலிஸார், இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.