ஜனாதிபதி செயலகத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் 16ம் திகதி, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கரையோரம் தூய்மையாக்கல் செயற்றிட்டம் தொடர்பில் அம்பாறை திருக்கோவில் தெளிவூட்டல் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் இக் கூட்டம்
இடம்பெற்றது. திருக்கோவில் பிரதேசத்தில் தம்பட்டை தொடக்கம் சங்கமன்கண்டி வரையான சுமார் 28 கி.மீ தூரம் கடற்கரை பிரதேசத்i தூய்மைப்படுத்துதல் தொடர்பில் ஆராயப்பட்டது.
உதவி பிரதேச செயலாளர் எஸ்.நிருபா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா, திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன், இராணுவத்தினர், பொலிசார் என பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.