கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் : கொக்கட்டிச்சோலை பொதுச்சந்தை மீண்டும் மக்கள் பாவனைக்கு!

0
23

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் கொக்கொட்டிசோலை பொதுச் சந்தை கடந்த நான்கு வருடங்களாக இயங்காத நிலையில் காணப்பட்ட நிலையில், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், மீண்டும் மக்கள் பாவனைக்கு இன்று திறந்து விடப்பட்டது.

கொக்கட்டிச்சோலை பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளமை தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்தே, மீண்டும் சந்தை திறக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகைக்கு மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபடுவதற்கேற்ப, சந்தை மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டுள்ளது.