28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய ஏர்பூட்டு விழா மீண்டும், கொக்கட்டிச்சோலையில் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தினை மேற்கொள்வோர் பண்டைய காலம் முதல் முன்னெடுக்கும் ஏர்பூட்டு விழா இன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில்
நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இந்த விழா நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரருக்கு தேர் உற்சவம் நிறைவடைந்ததும் மழைபெய்யும் என்றும் அக்காலப்பகுதியில் விவசாயிகள் தங்களது வயல் நிலங்களில் விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது காலம்காலமாக நடைபெற்றுவருகின்றது.
இக்காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலையில் ஏர்பூட்டப்பட்டதை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் விவசாயிகள் தமது நெற்செய்கையினை ஆரம்பிப்பர்.
இவ்வாறான நடைமுறைகள் யுத்த காலத்தில் இல்லாமல்போயிருந்த நிலையில் மீண்டும் இந்த பண்டைய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று காலை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களின் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்று
ஏர்பூட்டி உழும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாக சபையினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் உட்பட விவசாயிகள்
பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles