கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.