அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அபுதாபியின் ஏர் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது.
அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இடையில் குறைந்த கட்டணத்தில் முன்னெடுக்கப்படும் இந்த விமான சேவை, அடுத்த வருடம் ஜனவரி 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஏர் அரேபியா நிறுவனம் அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான வாராந்தம் மூன்று விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.அதன்படி, புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவுக்கும், திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கட்டுநாயக்கவிலிருந்து அபுதாபிக்கும் விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தநிலையில், ஏர் அரேபியா தமது சேவையை விஸ்தரிக்கும் 34ஆவது பயண இலக்காக கட்டுநாயக்க அமைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.