குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

0
11

கொழும்பு வெல்லம்பிட்டிய – வடுகொடவத்த பகுதியில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சிந்தா என்பவர், வேறொரு நபரைக் கொலை செய்வதற்காக, துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக, வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனையடுத்து, பொலிஸார் சோதனை நடத்திய போது, சந்தேக நபரிடம் இருந்து, 11 கிராம் ஐஸ் போதைப்பொருளும் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.