நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பவுலுக் சில்வா மாவத்தை பகுதியில் உள்ள நீர் நிரம்பிய குழியில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். சடலமானது நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.