24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொடுக்குளாய் – இயக்கச்சி வீதி தற்காலிகமாக புனரமைப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் இயக்கச்சி அபாயவெளி வீதியின் ஒரு பகுதி, பருத்தித்துறை பிரதேச சபையால் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளது.ஆழியவளையிலிருந்து இயக்கச்சி செல்கின்ற அபாய வெளியேற்ற வீதி, மழைவெள்ளம் காரணமாக கடுமையாக சேதமடைந்திருந்த நிலையில் அதனை புனரமைக்கும் பணியில் நேற்று பருத்தித்துறை பிரதேச சபையினர் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த வீதி சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதனால் நாளாந்தம் வர்த்தக ரீதியிலான பயணத்தில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் பணிகளுக்கு செல்வோரும் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்திருந்தனர்.மக்களின் தொடர் கோரிக்கைக்கு அமைய நேற்று பருத்தித்துறை பிரதேச சபையால் வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக புனர்நிர்மானம் செய்யப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles