கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்கவிளைவுகள்,
ஆய்வில் கண்டறிவு!

0
118
FILE PHOTO: A woman holds a small bottle labelled with a "Coronavirus COVID-19 Vaccine" sticker and a medical syringe in this illustration taken October 30, 2020. REUTERS/Dado Ruvic/File Photo

பைசர், அஸ்ட்ராஷெனகா, மொடேர்னா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்த நாளங்கள், நரம்புகளில் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கனடா, பிரான்ஸ், டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து, ஆர்ஜென்ரீனா, ஸ்கொட்லாந்து என 8 நாடுகளில் சுமார் 10 கோடி மக்களை உள்ளடக்கி இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக, ஆய்வை நடத்திய உலக சுகாதார அமைப்பு ஆராய்ச்சி பிரிவின் ‘குளோபல் வக்சின் டேற்றா நெற்வேர்க்’ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு நிறுவனம் பைசர், மொடர்னா, அஸ்ட்ராசெனகா கொவிட் தடுப்பூசிகளை பெற்ற பின்னர் அந்த நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து எவ்வாறு அதிகரித்தது என்பதை ஆய்வு செய்தது.

ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த கொவிட் தடுப்பூசிகளால் ஏற்படும் 13 பக்க விளைவு நோய்களை கண்டறிந்துள்ளது.

அத்துடன், மொடர்னா, பைஸர் தடுப்பூசிகளின் மூன்று டோஸ்களையும் பெற்ற பின்னர் மாரடைப்பு நோய் ஏற்படும் அபாயம் 6.9 மடங்கு அதிகரித்துள்ளது.