இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்த மூவரின் இறுதிச் சடங்கு இன்று இடம் பெற வுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் 17 ஆவது நபர் நேற் றைய தினம் ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
குறித்த நபர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச் சைப் பெற்று வந்த 19 வயதுடைய வாழைத்தோட்டம் பகுதி யைச் சேர்ந்த ஒருவரும் 75 வயதுடைய கொழும்பு 02 பகுதி யைச் சேர்ந்த பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
அத்துடன், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் கலந்துகொள்ளுமாறு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.