திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத்த ணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 396 உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் 457 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திவுலபிட்டிய- பேலியகொட கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 447 பேர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மத்திய நிலை யத்தில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாட்டின் 32 வைத்தியசாலைகளில் 4 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்றால் 4ஆயிரத்து 043 பேர் குண மடைந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது