கொரோனா தொற்று நீங்க வேண்டி கிழக்கில் விசேட பூஜை வழிபாடு

0
163

கொரோனா தொற்று நீங்கி நாடு சுபீட்சம்பெறவேண்டி வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று
விஷேட திரவ்ய ஹோமம் மிருத்திஞ்ஜய ஹோமம் விஷேட நவோத்தர ஸஹஸ்ர ( 1009 ) மஹா சங்காபிஷேகம் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான ஆலயமாகவும் கண்டி இராச்சியத்தை ஆண்ட பாலசிங்க மன்னணின் மகன்
இராஜசிங்கனால் அமைக்கப்பட்டதுமான வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று இன்று விஷேட திரவ்ய ஹோமம் மிருத்திஞ்ஜய ஹோமம் விஷேட நவோத்தர ஸஹஸ்ர ( 1009 ) மஹா சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் இந்த விசேட பூஜைகள் மற்றும் சங்காபிசேகம் நடைபெற்றது.

உலகையும் இலங்கையையும் பீடித்துள்ள கொரனா என்னும் அரக்கன் அழிந்து நாடு சுபீட்சம் அடையவும் நாட்டு மக்கள் நோய்நொடியின்றி வாழவும் இந்த விசேட யாகம் மற்றும் சங்காபிசேகம் நடாத்தப்பட்டது.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் ஆலய நிர்வாகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு பூஜைகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.