26 C
Colombo
Tuesday, November 12, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் சில மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

குறைந்த பட்ச பணியாளர்களை பயன்படுத்தி மத்திய தபால் பரிமாறல் கடமைகளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் , இந்த ஆளணியினரை எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படத்திய மூன்று சந்தர்ப்பங்களில் மூவர் தொற்றுக்குள்ளானதாக பதிவானதையடுத்து இந்த அலுவல்களை முழுமையாக இடைநிறுத்துவதற்கு கடந்த 05 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஊரடங்கு சட்டத்தில் தளர்வு ஏற்பட்;படுத்தப்படுவதை தொடர்ந்து கிருமி நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட மத்திய தபால் பரிமாறல் வரையறுக்கப்பட்ட கடமைகள் சிலவற்றுக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக

• சர்வதேச விரைதூதர் தபால் சேவை ( EMS Courier)

• வர்த்தக தபால் (Business mail)

• உள்ளூர் விரைதூதர் தபால் சேவை ( SL Post Courier)

நவம்பர் மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் செயற்பாட்டு அலுவல்களுக்காக திறக்கப்படும.; பதிவுத் தபால் (Register Letters) பிரிவு தெரிவு நடவடிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமையன்று திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் கொழும்பு மாநகரிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் அரசாங்க அலுவலகங்களுக்கு பதிவு செய்யப்பட்ட தபால்களை விநியோகிக்கும் அலுவல்களை 11ஆம் திகதி புதன் கிழமை தொடக்கம் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அல்லது தனியார் நிறுவனங்களுக்கான முத்திரை இடல் இயந்திரம் தொடர்பான அலுவல்களை நவம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கக் கூடியதாக இருப்பதுடன் அதற்கான 0112 320 700 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு நேரத்தை தெரிவுசெய்துக் கொள்ளுவதற்கான முன்னேற்பாட்டை மேற்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கின்றோம்.

இருப்பினும் வரையறுக்கப்பட்ட ஊழியர்களைப் பயன்படுத்தி கடமைகளை நிறைவேற்றவேண்டியிருப்பதினால் கடமைகள் ஓரளவிற்கு தாமதமடையக் கூடும் என்பதை மேலும் அறியத்தருகின்றோம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles