கோவிட் தொற்று 10,000ஐ தாண்டியது

0
186

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை நேற்று பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகள் 10,105 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 10,105 நோயாளிகளில் 100 வெளிநாட்டு நோயாளிகளும் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

1,420 நோயாளிகள் இலங்கையர்கள் என்றும் அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.