31 C
Colombo
Saturday, September 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்படுவதனால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் பாதிக்கப்படும் எனவும் 2024 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை நிறைவு செய்வதிலும் பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.
உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்ட அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பரீட்சைக்குத் தயாராகி வருவதற்கு போதிய கால அவகாசம் இல்லாததால், பரீட்சைக்குத் திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு இது அநீதியானது என சுட்டிக்காட்டினர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles