சங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா

0
255

கொழும்பு சங்கிரி லா ஹோட்டலின் பணியாளர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஹோட்டலின் ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து நேற்று தகவல் கிடைத்தது என ஹோட்டலின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது உருவாகிவரும் நிலையில் எங்கள் விருந்தாளிகள் மற்றும் சகாக்களினது உடல்நலம் எங்களிற்கு மிகவும் முக்கியம்,இதன் காரணமாக நாங்கள் முன்கூட்டியே சோதனைகளை மேற்கொண்டோம் என சங்கிரி லா ஹோட்டல் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது ஹோட்டல் பணியாளர் ஒருவருக்கு கொரோன பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது, எனினும் அவரிடம் நோய்க்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் ஹோட்டலின் விருந்தாளிகளுடன் நேரடியாக தொடர்புபை பேணவில்லை என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.