சஜித் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. ஆகியோர் காலநிலை மாற்றக் குழுவின் இணைத் தலைவர்களாகத் தெரிவு!

0
23

காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் இணைத் தலைவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.எம். அபேவிக்ரம ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் காலநிலை பிரச்சினைகள் குறித்து விரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இது தொடர்பில் நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் கண்டறிவதற்காக செயற்படுவதாகவும் இணைத் தலைவர்கள் தெரிவித்தனர்.